பறவை இனங்கள் :: கோழி வளர்ப்பு :: குஞ்சு பொரித்தல் | முதல் பக்கம் |
முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்
கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
எனவே பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.
5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும். குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும். |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15 |